
ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா?
இதைச் செய்ய Blogger Settings-> Email and Mobile Templates என்பதில் சென்று Yes.On Mobile devices என்பதைக் கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம். பக்கத்திலேயே இருக்கும் Preview பட்டனைக் கிளிக் செய்து உங்கள் வலைப்பூ மொபைலில் எப்படி காட்சியளிக்கும் என்றும் பார்த்துக் கொள்ளலாம். இதில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.
1. இனிமேல் மொபைலில் இருந்து யாரேனும் உங்கள் வலைப்பூவைப் பார்த்தால் நேரடியாக வலைப்பூவின் மொபைல் பதிப்புக்கு கொண்டு செல்லப்படும். தேவைப்பட்டால் முழுதும் பார்க்க Standard web version ஐ மொபைலில் பார்த்துக் கொள்ளலாம்
2. இந்த மொபைல் பதிப்பில் பிளாக்கரின் 27 வகையான டெம்ப்ளேட்கள் ஆதரவளிக்கப்படுகின்றன. நீங்கள் தற்போது எந்த வகையான டெம்ப்ளேட் பயன்படுத்தினாலும் அதனைப் பொதுவான முறையில் காண்பித்து விடும். ஆனால் Blogger Layout Template களைப் பயன்படுத்தி வந்தால் அதே தோற்றத்தில் பார்க்க முடியும்.
![]() | ![]() |
4. மொபைல் மூலம் பதிவின் கருத்துரைகளைப் (Comments) படிக்க முடியும். புதிய கருத்துரைகளைச் சேர்க்க முடியும். இனி அவசரத்திற்கு மொபைலிலேயே கருத்துகளை இட்டுக்கொள்ளலாம்.
5. பதிவுகளில் வீடியோ எதேனும் இணைத்திருந்தால் அதனையும் நமது வலைப்பூவிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். (Video Supporting)
இதைப்போல இந்த வருடத்தில் புதுமையான மாற்றங்களை பிளாக்கரில் கொண்டு வரப்போகிறது கூகிள். தயாராக இருங்கள்.
நன்றி -பொன்மலர்


No comments:
Post a Comment