;

Saturday, July 21, 2012

காற்றில் அலையும் சொற்கள்! - இரா.பூபாலன்


தேவையற்ற
தேவை என்றாகிவிட்ட
அலைபேசியில்
அன்றாடம் ஏதேனும்
சங்கடம்...

பெரியப்பா செத்துப்போன
இரவில்
விவரம் தெரியாத நண்பன்
அடுத்த மாதப் பொங்கலுக்கு
இனிப்பான வாழ்த்துக்கள்
அனுப்புகிறான்.

அலுவல்களின்
மும்முரங்களிலும்
பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது
தவறான அழைப்புகளுக்கு.

கடன் தருவதாகச்
சொல்லும் முகம்
பார்க்காமல்
நட்புறவாகும்
பெண்களைச்
சபிக்க வேண்டியதாயிருக்கிறது.

மருத்துவமனை
பிணவறையிலும்
கேட்க நேரிடுகிறது
புதுப்படப் பாடலின்
ரிங்டோனை.

இத்தனைக்கு இடையிலும்...
'பத்திரமா வந்துட்டேன்ப்பா'
தனித்து வெளியூர் சென்ற
மகளின் குரல் கேட்கையில்
வரமாகிவிடுகிறது அலைபேசி!

ஆனந்த விகடன் 

No comments:

Post a Comment